தளபதி 64 படத்தில் மாணவராக நடிக்கும் விஜய்! வைரலாகும் புகைப்படம் 

 

தளபதி 64 படத்தில் மாணவராக நடிக்கும் விஜய்! வைரலாகும் புகைப்படம் 

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் சூழலில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்றுவருகின்றன. த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

Thalapathy 64|

இந்நிலையில் தளபதி 64 படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. அதில்  நடிகர் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்து மாணவர்களுடன் அமர்ந்திருக்கிறார். இதிலிருந்து நடிகர் விஜய் மாணவராக நடிக்கிறாரா அல்லது பேராசிரியராக நடிக்கிறாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.