தளபதி 63: வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வீடியோ!

 

தளபதி 63: வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வீடியோ!

தளபதி 63 படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெறி, மெர்சல் வெற்றி திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கின்றனர். 

nayanthara

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நயன்தாரா கலந்துக் கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.