தளபதி 63 பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் எப்போது?

 

தளபதி 63 பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் எப்போது?

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும்  ‘தளபதி 63’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இதன் சண்டை காட்சிகள் பின்னி மில்ஸில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 14-ஆம் தேதியும், டீசர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதியும் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. சர்ச்சைகளுடன் வெளியான ‘சர்கார்’ படத்துக்கு பிறகு வரும் படம் என்பதால், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.