தளபதி 63 படத்தில் நயன்தாரா பெயர் இது தானா?

 

தளபதி 63 படத்தில் நயன்தாரா பெயர் இது தானா?

தளபதி 63 படத்தில் நயன்தாராவின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தளபதி 63 படத்தில் நயன்தாராவின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

வில்லு படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் திரைப்படம் தளபதி 63. மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அட்லீ இயக்கிவரும் இந்த படத்தில்  ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தில் விஜயின் பெயர் பிகில் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. தற்போது இதில்  நயன்தாராவின் பெயர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்.. இதில் அவரின்  கதாபாத்திரத்தின் பெயர் ‘ஏஞ்சல்’ என்று கூறப்படுகிறது. 

nayan

மேலும் இதில் தளபதி விஜய் அப்பா -மகன் என்று இரு வேடத்தில் ஒரே காட்சியில் தோன்றவுள்ளதாகக் கூறப்படுகிறது.