தளபதி 63 படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் விஜய்! 

 

தளபதி 63 படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் விஜய்! 

தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மூன்றாவது முறையாக அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகிவரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் இதில் விஜய், தந்தை, மகன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அப்பா விஜயின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக விஜய்  மெர்சல், கத்தி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் இரண்டு தோற்றங்களில் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.