தளபதி விஜயுடன் நடனமாடும் பாலிவுட் கிங்! உற்சாகத்தில் ரசிகர்கள் 

 

தளபதி விஜயுடன் நடனமாடும் பாலிவுட் கிங்! உற்சாகத்தில் ரசிகர்கள் 

சென்னை: தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் பாலிவுட் கிங் நடனமாடவிருப்பதாக்கத் தகவல் வெளியாகியுள்ளது. 

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி  என்று நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் விஜயின் லுக் குறித்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த சமயத்தில் ஷாருக்கானும், இயக்குநர் அட்லியும் அமர்ந்திருந்து பார்த்தனர். உடனே ஷாருக்கான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது. 

ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை, என்பதால் அது பொய்யான செய்தி என்று தெரியவந்தது. தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிகில் படத்தில் விஜய்யும், ஷாருக்கானும் ஒரு பாடலில் இணைந்து நடனமாடவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியாவது உண்மையா அல்லது வதந்தியா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

vi

மேலும் ஷாருக்கான் ‘zero’ படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல், நேரடியாக விஜய் படத்தில் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.