தளபதி விஜயின் 64வது பட நாயகிகள் இவர்கள் தான்! 

 

தளபதி விஜயின் 64வது பட நாயகிகள் இவர்கள் தான்! 

தளபதி 64 படத்தின் நாயகிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: தளபதி 64 படத்தின் நாயகிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படத்தைத் தொடர்ந்து ‘தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. அந்த படத்தை மாநகரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். 

இந்த நிலையில் இந்த படத்தில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது. அதற்காக இயக்குநர் இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் ஒருவர் ராஷிகண்ணா. இவர்தான் ‘தளபதி 64’ படத்தின் மெயின் நாயகியாம். மற்றொரு நாயகியாக ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கின்றதாம். 

thalapathy

மேலும்  பிகில் படத்தில் நயன்தாராவின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவியது. அப்போது அது குறித்து பேசிய அவர், ‘விஜய் மற்றும் அட்லியின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறையப் பேர் என்னிடம் கேட்கிறீர்கள். இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனால் கண்டிப்பாக இந்த படத்தில் ராஷ்மிகா  நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.