தல ரசிகர்களிடம் மல்லுக்கட்டும் சாந்தனு!

 

தல ரசிகர்களிடம் மல்லுக்கட்டும் சாந்தனு!

நடிகர் சாந்தனு, விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் சாந்தனு, விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் 45வது பிறந்தநாள் விழா இன்று. இதற்காக அவரது ரசிகர்கள் தீவிரமான கொண்டாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல்  சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் அவரது ரசிகர்கள் விஜய் குறித்து பல ட்வீட்கள் பதிவிட்டு உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக தளபதி 63வது படமான பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டது. 

இந்த நிலையில் விஜய்க்கு சமூகவலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பாக்கிய ராஜின் மகனான சாந்தனு தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் இன்று காலை நடிகர் விஜயுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். 

shantanu

இதைப் பார்த்த அஜித் ரசிகர் ஒருவர்’ விஜய்காக கட்டப்பா ஆஜர் ஆகிவிட்டார்’ என்று கமெண்ட் ஒன்றைப் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த சாந்தனு, ‘மூஞ்சி தெரியாத நீங்க உங்க தலைக்கு ஆஜர் ஆகறப்ப, மூஞ்சி தெரிஞ்ச நான் என் அண்ணனுக்கு ஆஜர் ஆகலாம் பாஸ்’ என்று சாந்தனு, அஜித் ரசிகர்களிடம்  மோதிக்கொண்டார்.