தல என்னுடைய நண்பர், தளபதி அற்புதமான மனிதர்- ஷாருக்கான் அசத்தல்!!

 

தல என்னுடைய நண்பர், தளபதி அற்புதமான மனிதர்- ஷாருக்கான் அசத்தல்!!

நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து நடிகர் ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து நடிகர் ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளார். 

இன்று காலை முதல் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் ஷாருக்கான் பதிலளித்துவருகிறார். ஷாருக்கானிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகளை #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு அவருக்கு டேக் செய்தால் அதற்கு ஷாருக்கான் பதிலளிக்கிறார். அதன்படி இன்று ஒரு ரசிகர் ஷாருக்கானிடம், விஜய், அஜித் மற்றும் தனுஷ் குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்  என்பதை ஒரு வரிக்கு மிகாமல் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். 

Ajith and vijay

இதற்கு பதிலளித்த நடிகர் ஷாருக்கான், விஜய் ஒரு அற்புதமான மனிதர் என்றும், அஜித் என்னுடைய நண்பர் மற்றும் தனுஷ் நான் நேசிக்கும் ஒரு நபர் என்றும் கூறினார். தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா என மற்றொரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, கண்டிப்பாக நடிப்பேன்… ஏனெனில் அந்த மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும்  என்றும் பதிலளித்துள்ளார். தற்போதும் #AskSRK  என்ற ஹேஷ்டேக் ட்ரண்டிங்கில் உள்ளது.