தல அஜித்துக்கு வில்லன் ரங்கராஜ் பாண்டே?

 

தல அஜித்துக்கு வில்லன் ரங்கராஜ் பாண்டே?

தல அஜித் நடிக்கும் ‘தல 59’ திரைப்படத்தின் மூலம் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.

சென்னை: தல அஜித் நடிக்கும் ‘தல 59’ திரைப்படத்தின் மூலம் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் மிக எளிமையான பூஜையுடன் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சி உள்ளிட்டோர் நடித்த ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ‘தல 59’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

thala59

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 பெண்கள், தங்களது வழக்கறிஞரின் உதவியுடன் 3 ஆண்களுக்கு தண்டனை வாங்கித் தருவதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இதில் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் தல அஜித்தும், 3 பெண்களில் ஒருவராக டாப்சி நடித்த கேரக்டரில் நஸ்ரியாவும், 3 ஆண்களில் ஒருவராக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

pink

இதன் கூடுதல் தகவலாக குற்றம்சாட்டப்படும் 3 ஆண்களின் சார்பாக வாதிடும் வழக்கறிஞராக நடித்த பியூஷ் மிஷ்ரா கேரக்டரில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்த நிலையில், சினிமாவில் ஆர்வம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தந்தி தொலைக்காட்சியில் ருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் தலைமை ஆலோசகராக இணையவுள்ளதாக வெளியான வதந்தியை ரஜினியே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை தல அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே-1ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.