தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை பூர்ணா

 

தலைவி படத்தில் இணைந்த  பிரபல நடிகை பூர்ணா

எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

 

சமீபத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை பூர்ணா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை பிரியா மணி, நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது