தலைவலியைப் போக்கும் கொத்துமல்லி சாதம்! ட்ரை பண்ணி பாருங்க!

தலைவலியைப் போக்கும் கொத்துமல்லி சாதம்! ட்ரை பண்ணி பாருங்க!

அடிக்கடி தலைவலி வருகிறதா? கவலையை விடுங்கள். உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் காரணமாக இருக்கலாம். இந்த சாதம் பித்தத்தை சீர்படுத்தி,பசியைத் தூண்டும் வல்லமை வாய்ந்தது.கொத்துமல்லி சாதம் அடிக்கடி உணவில் சேர்க்க செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

kothamalli rice

தேவையான பொருட்கள்
வடித்த சாதம் -1கப்
கொத்துமல்லி இலை-1கட்டு
சின்னவெங்காயம் -15
பச்சை மிளகாய் -4
பூண்டு -3பல்
புளி -சிறிய எலுமிச்சை அளவு
நெய் -1டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -2டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு -1/2டீஸ்பூன்
முந்திரி -10
உப்பு -தேவையான அளவு

kothamalli rice

செய்முறை
வாணலியில் சிறிது நெய் விட்டு கொண்டு உளுத்தம் பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லி இலைகள் என ஒவ்வொன்றாக வதக்கி ஆற விட வேண்டும். இதனுடன் புளி சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் கடுகு தாளித்து அரைத்த பேஸ்ட்டை  உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு ஆறிய சாதத்தை போட்டு கிளறி விட வேண்டும். வறுத்த முந்திரியைத் தூவி விட்டால் கமகம வாசனையுடன் கொத்துமல்லி சாதம் தயார்.