தலைவர் 168 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குஷ்பு?

 

தலைவர் 168 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குஷ்பு?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்தில் நடிகை குஷ்பு நடிக்கவிருப்பதாக நம்ப தகுந்த இடத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. டி. இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

தலைவர் 168

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிகை குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்ட வரிசையில் குஷ்பு முதலிடத்தில் இருக்கிறார்.