தலைவர் 168 படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்! 

 

தலைவர் 168 படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்! 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருப்பதாக அப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 

பிரகாஷ்ராஜ்

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. டி. இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. 

 

 

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடித்த பெரும்பாலான படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லனாகவே வலம் வந்திருக்கிறார். அந்தவகையில் தலைவர் 168 படத்திலும் வின்னராக களமிறக்கப்படுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.