தலைவருக்கு டஃப் குடுக்க தலைவரால் மட்டும் தான் முடியும்; பட்டையை கிளப்பும் ‘பேட்ட’ டீசர்!

 

தலைவருக்கு டஃப் குடுக்க தலைவரால் மட்டும் தான் முடியும்; பட்டையை கிளப்பும் ‘பேட்ட’ டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மரண மாஸ் கிளப்பும் ‘பேட்ட’ டீசர் வெளியானது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மரண மாஸ் கிளப்பும் ‘பேட்ட’ டீசர் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் மரண மாஸான பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலில் அனல் பறக்கும் டீசர் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க ரஜினிஸம் காட்டும் இந்த டீசரில் சில சர்ப்ரைஸ்களை வைத்து ‘பேட்ட’ படக்குழு அதகளம் செய்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள், இசையமைப்பாளர் என அனைவரும் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்கள் என்பதால் ரசிகர்கள் விரும்பும்படியாக டீசர் காட்சிகள் அமைந்துள்ளன.

‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல’.. என்ற நீலாம்பரியின் வசனத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டும் விதமாக டீசரில் பழைய ஸ்டைல் கெத்துடன் சொடுக்குப் போட்டுக் கொண்டே செல்லும் ரஜினியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ் பிறந்தநாள் ட்ரீட்டாக ’பேட்ட’ டீசர் அமைந்துள்ளது. ‘பேட்ட’ டீசர் வெளியான 20 நிமிடங்களிலேயே 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இத்துடன், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.