“தலைவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி”- தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் தாறுமாறு பேட்டி-ட்விட்டரில் ட்ரெண்ட் ..

“தலைவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி”- தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் தாறுமாறு பேட்டி-ட்விட்டரில் ட்ரெண்ட் ..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் உலகெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
பொதுவா ரஜினி படத்தில் வில்லன்களும் ரஜினிக்கு இணையாக பேசப்படுவார்கள் .ரகுவரன் ,,ராதாரவி ,ஏன் நீலாம்பரி ரம்யாகிருஷ்ணன்  போன்றவர்கள் வரிசையில் சுனில் ஷெட்டியும்  இடம்பெறுவார்.

ஏனென்றால்  தர்பார்  படத்தில் சூப்பர் ஸ்டாருக்கிணையாக நடித்த மும்பை வில்லன் சுனீல்ஷெட்டி யை பற்றி படத்தை பார்த்த அனைவரும் பரபரப்பாக பேசி வருகிறார்கள் .சமூக ஊடகங்களிலும் #சுனீல்ஷெட்டி ட்ரெண்ட் ஆகி வருகிறது ,பலர் “I Love Sunil Shetty “என போஸ்டுகளை போட்டு வருகிறார்கள் .பல பத்திரிகைகள் .தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் படத்தின் விமர்சனத்தில் சுனில் ஷெட்டியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள் ,ரஜினிக்கு இணையாக ஈடுகொடுத்து படத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் சுனீல்ஷெட்டியை நாமும் பாராட்டியே ஆக வேண்டும்,அந்தளவுக்கு தர்பாரில் தாறுமாறு பண்ணியிருக்கிறார்.

sunil-shetty

இந்த வெற்றி பற்றி சுனீல்ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் ,அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் சுனீல்ஷெட்டி ,தர்பாரின்  இந்த  மாபெரும் வெற்றியை தந்த அனைத்து தலைவர் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் ,மேலும் #We Love Sunil Shetty  யை ட்ரெண்ட் ஆக்கியதற்கும் ,படத்தில் தன் நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார் .தன் மீது பாசமும் நேசமும் கொண்ட தமிழக ரசிகர்கள்  மீது தான் மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பதாகவும் ,தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் முருகதாஸ் ,மற்றும் கேமராமேன் சந்தோஷ்சிவன் ஆகியோருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.