தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையை நியமித்த ஸ்விக்கி

தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையை நியமித்த ஸ்விக்கி

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது.  

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது.  

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் முதன்மை நிறுவனமான ஸ்விக்கி தனது நிறுவத்தின் முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கையை நியமனம் செய்துள்ளது. பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த சம்யுக்தா 10 ஆண்டுகளாக அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அதன்பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்ட சம்யுக்தா ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பேஷன் டிசைனராகவும் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த இவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். தற்போது இவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.