‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்கிறார்களே… இதற்கு என்ன பரிகாரம்?

‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்கிறார்களே… இதற்கு என்ன பரிகாரம்?

இதெல்லாம் திடீர் திடீர் என்று முளைத்த ஜோதிட மையங்களிலும், திருமண தகவல் மையங்களிலும் இருப்பவர்கள் உருவாக்கி வைத்த கட்டுக் கதை. இதற்கு என்ன பரிகாரம் என்று தேடுவதை விட்டு விட்டு, உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ நல்ல வரன்கள் அமைந்தால் திருமணத்திற்கு கால காலத்தில் நாள் குறித்து தடபுடலாக கல்யாணம் செய்து வையுங்கள். தம்பதியர்கள் சகல செளபாக்யங்களும் பெற்று நீடூழி சந்தோஷமாக வாழட்டும்.

marriage

‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்ற சொல் வழக்கை,பலர் தவறாகப் புரிந்து கொண்டு தங்களது மகன், மகளின் திருமண வாழ்க்கையை அதீத பாசத்தால் பாழ்படுத்தி வருகிறார்கள். நல்ல வரன்களை எல்லாம் இதைக் காரணம் காட்டி, திருமணத்தைத் தள்ளிப் போட்டு, தங்கள் பிள்ளைகளின் வயது ஏறிக் கொண்டே சென்றப் பிறகு வருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் .

குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப்  பிறந்த ஆணுக்கு, மூத்தவளாகப் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று இதை பலரும் தவறாகப் புரிந்துக் கொள்கிறார்கள்.அது தவறு. ஜோதிடத்தில் அப்படியெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. குடும்பத்திற்கு ஒருத்தர் போதும்… அது பெண்ணோ, ஆணோ என்று,  பல குடும்பத்திலும் ஒரு  பிள்ளையோடு நிறுத்தி விடுகிற இந்த காலத்தில் தலைச்சனுக்கு தலைச்சனைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

marriage

உண்மையில் இந்த சொல்வழக்கிற்குப் பொருள் என்ன தெரியுமா? ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும்  (ஜேஷ்ட குமாரன்), அதே ஆனி மாதத்தில்  பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது. 

அப்படிச் செய்து வைத்தால் அவர்களது சந்ததி பாதிக்கப்படும்  என்கிறது காலாமிருதம் ஜோதிட நூல். இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள்.