தலித் பெண்ணை கடத்தினர், கற்பழித்தனர், தற்கொலை போல கயிற்றில்  மாட்டினர் – கூட்டாக சேர்ந்து குதறிய கொடுமை .. 

தலித் பெண்ணை கடத்தினர், கற்பழித்தனர், தற்கொலை போல கயிற்றில்  மாட்டினர் – கூட்டாக சேர்ந்து குதறிய கொடுமை .. 

அகமதாபாத், ஜனவரி 10:  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  தூக்கிலிடப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு குஜராத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாத தொடக்கத்தில் போராட்டம் நடத்தினர். ஜனவரி 5 ம் தேதி குஜராத்தின் மொடாசாவில் இந்த சோகமான சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு கும்பல் 19 வயதான தலித் பெண்ணை கடத்தி, கற்பழித்து,  படுகொலை செய்து  தற்கொலை போல தெரிய உடலை மரத்தில் தொங்கவிட்டார்களாம்… விரைவில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி ட்வீட் மூலம் சமூக ஊடகங்கள் வெடித்தன. 2012 ம் ஆண்டு நிர்பயா கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த  கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை  பிறப்பித்த சில நாட்களில் இது நடந்தது . 

அந்த பெண்ணின் உடலை அகமதாபாத்  மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு புதன்கிழமை பிரேத பரிசோதனை நடத்தியது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய தனி  காவல்துறை அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் அகமதாபாத் சிவில் மருத்துவமனை முன்பு  போராட்டத்தில் அமர்ந்துள்ளனர்.   டிசம்பர் 31 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போயுள்ளதாகவும், அவரது உடல் ஜனவரி 5 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்த வழக்கு குறித்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை செய்யவில்லை என்று கூறி குடும்பத்தினர் உடலை ஏற்க மறுத்துவிட்டனர். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர், அகமதாபாத்  மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட உடலை வாங்க  குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். உள்ளூர் காவல் நிலையம் முன் ஆயிரக்கணக்கான தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் பல்வேறு விதிகள் மற்றும் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.