“தற்போது படங்களுக்கு எந்த வித அப்டேட்டும் கிடையாது”.. போனி கபூரின் அதிரடி அறிக்கை!

 

“தற்போது படங்களுக்கு எந்த வித அப்டேட்டும் கிடையாது”.. போனி கபூரின் அதிரடி அறிக்கை!

நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 33,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். அதே போல இந்த ஊரடங்கினால் பல தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் முடங்கியுள்ளது. அந்த வகையில் திரைத்துறையும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதன் காரணமாக நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல முடங்கியுள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

ttn

இந்நிலையில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்திற்கும் விளம்பரம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ttn

அதில், “கொவிட்-19  என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம். நம் நலம் காப்போம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.