தர்பார் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் ஸ்டார் கொடுத்த அப்டேட்!

 

தர்பார் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் ஸ்டார் கொடுத்த அப்டேட்!

தர்பார் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். 

தர்பார் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் ஸ்டார் கொடுத்த அப்டேட்!

சென்னை: தர்பார் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். 

ஏ.ஆர் முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம்  தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார். 

தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றுவந்த நிலையில் படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து படக்குழுவின் சார்பில் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.மேலும் படத்தின் ,மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

இந்நிலையில், மும்பையில் தர்பார் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தர்பார் படப்பிடிப்பு சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாகும் என்றார். தொடர்ந்து அவரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் குளங்களை தூர்வார்வது குறித்து கேள்வி எழுப்பிய போது, தமது ரசிகர்கள் குளங்களைத் தூர்வாரும் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ‘ என்று கூறினார்.