‘தர்பார்’ பட சிறப்புக் காட்சிகளை 4 நாட்களுக்கு வெளியிடத் தமிழக அரசு ஒப்புதல் !

 

‘தர்பார்’ பட சிறப்புக் காட்சிகளை 4 நாட்களுக்கு வெளியிடத் தமிழக அரசு ஒப்புதல் !

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக நாளை  தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக நாளை  தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ttn

சூப்பர் ஸ்டாரின் படம் நாளை வெளியாவதால் தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர். இந்த படத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து எல்லாம் ரசிகர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் வெளியான வன்முறையைக் காரணம் காட்டி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 தியேட்டர்களில் ஸ்பெஷல் ஷோ திரையிட காவல்துறை தடை விதித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், ஸ்பெஷல் ஷோ என்ற பேரில் தியேட்டர்கள் அதிக பணம் வசூலிப்பதாகவும், விடுமுறை காலங்களில் காலை 9 மணிக்கே படக் காட்சி தொடங்கும் என்றிருக்கையில், சென்னையில் அதிகாலை 1 மணி முதலே சிறப்புக் காட்சியைத் தொடங்கி விடுவதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என்றும் தேவராஜன் புகார் அளித்தார்.  

ttn

இது குறித்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முறைப்படி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், நாளை வெளியாக உள்ள தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளை 4 நாட்கள் திரையிடத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.