தர்பார் படத்திலிருந்து சசிகலா குறித்த காட்சியை நீக்கக்கோரி புகார் மனு

 

தர்பார் படத்திலிருந்து சசிகலா குறித்த காட்சியை நீக்கக்கோரி புகார் மனு

தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்த வசனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்த வசனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தில் அரசியல் இருக்காது என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்த நிலையில் சசிகலாவை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ரஜினிகாந்த் சிறைக்குள் நடந்து சென்றுகொண்டிருப்பார்.

தர்பார்

அப்போது, கைதி ஒருவர் சிறையில் செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். இதைப் பார்த்த உயரதிகாரியான ரஜினி, வார்டனிடம் ஜெயிலில் செல்போன் எல்லாம் உண்டு போல என்று சொல்வார். அதற்கு வார்டன், காசு இருந்தால் போதும் சார், ஷாப்பிங்கே சென்று வரலாம் என்பார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றுவந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. அதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த காட்சி இருந்தது. 

தர்பார்

இந்நிலையில் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர்  முருகதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் என சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்நோக்கத்துடன் தான் இதுபோன்ற காட்சிகளை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.