‘தர்பார்’ ஆடியோ விழா…சென்னைக்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

 

‘தர்பார்’ ஆடியோ விழா…சென்னைக்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தில் முதல் சிங்கிள் டிராக்  சமீபத்தில் வெளியானது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தில் முதல் சிங்கிள் டிராக்  சமீபத்தில் வெளியானது.

DARBAR

 நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு எனத் தொடங்கும் இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் மிரட்டும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. 

darbar

இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று  மாலை  5 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர். இதனிடையே தர்பார் ஆடியோ விழாவில் கலந்துகொண்டுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் சென்னைக்குப் படையெடுத்து வருகின்றனர்.