தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது வழக்குப்பதிவு

 

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது வழக்குப்பதிவு

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய முடிவுகளை பொதுக்குழுவை கூட்டாமல் தனிச்சையாக செயல்படும் விஷாலுக்கு எதிராக சிவா, கே.ராஜன், .எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா உள்ளிட்டோர், சங்க அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், அந்த பூட்டை அகற்ற முயன்ற போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

tfpc

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக விஷால் மீது குற்றம்சாட்டி போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது. தற்போது ஹபிபுல்லா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

vishal

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனுமதியின்றி கூடியது(151), தகராறில் ஈடுபட்டு பொது அமைதியை குலைத்தது(145) என 2 பிரிவுகளின் கீழ் நடிகர் விஷால் மீது பாண்டி பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.