தமிழ் ராக்கர்ஸில் வெளியானது தர்பார்! 

 

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது தர்பார்! 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாகத் தமிழ்  ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகின்றன. கால்நடையாகச் சென்று படம் பார்த்த காலம் போகி மக்கள் இணையத்தில் பார்க்கவே விரும்புகின்றனர்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாகத் தமிழ்  ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகின்றன. கால்நடையாகச் சென்று படம் பார்த்த காலம் போகி மக்கள் இணையத்தில் பார்க்கவே விரும்புகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை மட்டுமின்றி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களால் தடை செய்ய எத்தனையோ முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான சூப்பர் ஸ்டாரின் தர்பார் படமும் வெளியான சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது. படம் ஆன்லைனில் கசிந்துள்ளதால் வசூல் பாதிக்கப்படும் என படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லிங்க்குடன் தர்பார் படம் வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.