தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ‘2.0’: அதிர்ச்சியில் திரையுலகம்!

 

தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ‘2.0’: அதிர்ச்சியில் திரையுலகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே ரிலீசான இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் கடும் சோகத்தில் உள்ளனர்.

tamilrockers

‘2.0’ படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் திருட்டுத்தனமாக ரிலீசாகியுள்ளது. திருட்டுத்தனமாக திரைப்படம் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக சுமார் 3000 இணையதளங்களை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் பைரசியும், அதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தையும் முடக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு பைரசி ஒரு சாபமாக இருப்பதாக தமிழ் திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.