தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு’…தோப்பில் முகமது மீரானுக்கு திருமாவளவன் இரங்கல்…

 

தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு’…தோப்பில் முகமது மீரானுக்கு திருமாவளவன் இரங்கல்…

“கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சுவண்ணம் தெரு” உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதி, தமிழ் இசுலாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வியலை உலகறியச் செய்தவர்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் னின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

meeran

இது தொடர்பால அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. “கடலோர
கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சுவண்ணம் தெரு” உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதி, தமிழ் இசுலாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வியலை உலகறியச் செய்தவர்.

mohammed meeran

குமரி மாவட்ட வட்டார வழக்கில் அமைந்த அவரது எழுத்துக்கள், ஒட்டுமொத்த
தமிழ்ச் சமூகத்தையும் கட்டிப் போட்டது. முஸ்லிம் சமூகத்தின் உள்
கட்டுமானம் குறித்த பார்வையை வெகுமக்களுக்குத் தந்ததில் அவரது
எழுத்துக்கு பெரும் பங்குள்ளது.மூடத்தனங்களை தோலுரித்தும், பிற்போக்கு
வாதங்களை எதிர்த்தும் தொடர்ச்சியாக படைப்புகளைத் தந்தவர். 

thirumavalavan

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்.சாய்வு நாற்காலி நாவலுக்காக இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இலக்கிய அன்பர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று திருமா இரங்கல் தெரிவித்துள்ளார்.