தமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா…? இனி உஷாரா இருந்துக்கோங்க!

 

தமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா…? இனி உஷாரா இருந்துக்கோங்க!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நம்ம மாநிலத்துக்கு ஸ்பெஷல் பேரு உண்டு. அதுக்கு காரணம், எந்த மாநிலமா இருந்தாலும், எந்த மொழி, இனமா இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு போயிட்டா ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்கலாம் என்பது தான். அப்படி சகோதரத்துவம் பாராட்டுகிற தமிழ்நாட்ல, முன்னாடியெல்லாம், எதுல வேணா கலப்படம் பண்ணுவாங்க…

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று நம்ம மாநிலத்துக்கு ஸ்பெஷல் பேரு உண்டு. அதுக்கு காரணம், எந்த மாநிலமா இருந்தாலும், எந்த மொழி, இனமா இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு போயிட்டா ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்கலாம் என்பது தான். அப்படி சகோதரத்துவம் பாராட்டுகிற தமிழ்நாட்ல, முன்னாடியெல்லாம், எதுல வேணா கலப்படம் பண்ணுவாங்க… ஆனா சாப்பாட்டுல மட்டும் பண்ண மாட்டாங்க என்கிற பேரும் இருந்துச்சு. இப்போ பானி பூரி விற்கிற இந்தி வாலாக்கள்ல ஆரம்பிச்சு, ரொட்டியும் சப்ஜியும் போட்டு தர்ற சர்தார்ஜியாகட்டும், ஸ்ட்ராங் டீ ஆற்றி தருகிற கேரள சேட்டன்களாகட்டும் கல்லா கட்டுவதையே பிரதான தொழில் பக்தியா பார்க்க ஆரம்பிச்சதுக்கப்புறம் தமிழ்நாட்ல உணவின் தரம், உண்ணும் படியாக எல்லாம் கிடையாது.
சிக்கன் பிரியாணி என்கிற பேர்ல நாய்க்கறியையும், பூனைக்கறியையும் திருச்சி ஏரியா முழுக்கவே சப்ளை செய்து வந்தது அம்பலமாகி மொத்த தமிழ்நாட்டையுமே அதிர வைத்தது சில வருஷங்களுக்கு முன்னாடி. தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடை இருந்ததுன்னா… அதே தெருவுல பத்து பாஸ்ட் புட் கடைகள் முளைச்சிருக்கு. ரோட்டோரமா அடுப்பை வெச்சு, மசாலா தூவி, தூக்கிப் போட்டு ப்ரை பண்ணும் இவர்களால் டூவீலரில் கடந்து செல்பவர்கள் கண் எரிச்சலாகி விபத்தான விஷயங்கள் எல்லாம் இருக்கு. ஆனா நான் சொல்ல வந்தது அதைப் பற்றி கிடையாது.
இந்த மாதிரியான இன்ஸ்டண்ட் பிரியாணி கடைகளில் ஒரு பக்கம் வினிகரில் ஒரு வாரத்துக்கு முந்தைய சிக்கனை ஊற வெச்சு பிரியாணியையும், சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ்யையும் போட்டு தர்றது ஒரு ரகம்னா நிறைய கடைகள்ல புழுக்கள் நெளிகிற சிக்கனை சமைச்சு தர்றதும் வழக்கத்துல இருக்கு. அவ்வளவு பெரிய கோழியையே சாப்பிடுறவங்க இவ்வளவு சிறுசா இருக்கிற புழுவையா கண்டுக்கப் போறாங்கன்னு நெனைச்சிருக்கலாம். 

99

சென்னை திருநின்றவூரில் பிரபலமான 99 டிகிரி ஃபாரன்ஹீட் உணவகம் இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி ரொம்ப ஆசையா குடும்பத்தோட பிரியாணி சாப்பிட போனாங்க. அப்படி போனவங்கள்ல சிலர் சிக்கன் பிரியாணியை முழுசா சாப்பிட்டு முடிச்சிட்டு உட்கார்ந்திருக்க, சிலர் அப்போது தான் சிக்கனை பிளந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க… இவங்க ஆரம்பிச்ச நேரம் சிக்கன்ல இருந்து சின்னதும், பெருசுமா புழுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைஞ்சாங்க! 
ஏற்கெனவே சிக்கனை ஒரு கடி கடிச்சவங்க அதிர்ச்சியில் நிற்க, இதுதொடர்பாக உணவக ஊழியர்களிடம் கேட்டப்போ, அதை அப்படியே தூக்கி போட்டுடுங்க… வேற சிக்கன் கொண்டு வந்து தர்றோம்னு கூலா பதில் சொன்னாங்க. மறுபடியும் சிக்கனான்னு ஆத்திரமடைஞ்ச குடும்பம், சிக்கனையும், புழுவையும் வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் வழியா உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர்.
வாட்ஸ்-அப் வீடியோவை மூணு நாளா பார்த்துக்கிட்டு இருந்த அதிகாரிகள், இனி அந்த கடையில ஆய்வு மேற்கொள்ள போறாங்களாம். அதிகாரிகள் அப்படித் தான் இருப்பாங்க… அதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க…. நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இனி எலிக்கறியா, பூனைக்கறியா, நாய்க்கறியான்னு மட்டும் சிக்கன் சாப்பிடும் போது யோசிக்காம, அந்த சிக்கன்ல புழு இருக்கா…ன்னு முதல்ல சிக்கனை முழுசா பிச்சுப் பார்த்துட்டு அப்புறமா வாய்க்குள்ள போடுங்க!