தமிழில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி

 

தமிழில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி

விஜய் தேவரகொண்டா நடித்த துவாரகா திரைப்படம் தமிழில் அர்ஜுன் ரெட்டி என்ற தலைப்பில் வெளியாகிறது

சென்னை: விஜய் தேவரகொண்டா நடித்த துவாரகா திரைப்படம் தமிழில் அர்ஜுன் ரெட்டி என்ற தலைப்பில் வெளியாகிறது

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகனவர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என அனைவற்றிலும் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ போன்ற திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் வெற்றியானதையடுத்து தமிழில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இது எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்றாலும் விஜய் தேவரகொண்டாவின் மவுசு இன்னும் அவர் ரசிகர்கள் மத்தியில் குறையாமலே இருந்தது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த  2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘துவாரகா’  படத்தை, தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஸ்ரீனிவாஸ் ரவிந்திரா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக பூஜா ஜவேரி நடித்துள்ளார். மேலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.தமிழில் இந்தப் படத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ என விஜய் தேவரகொண்டாவின் புகழ்பெற்ற படத் தலைப்பை வைத்துள்ளனர். பாடல் பதிவுடன் நேற்று இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

arjun reddy

காதல், ஆக்ஷன், கமர்ஷியல் என்று மூன்று ஒன்றுசேர்ந்த அர்ஜுன் ரெட்டியை போலவே இந்த அர்ஜுன் ரெட்டியும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.