தமிழில் சூப்பர் ஹிட்டான ‘விஸ்வாசம்’ தெலுங்கில் தோல்வியா? – அஜித்திற்கு தொடரும் சோகம்

 

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘விஸ்வாசம்’ தெலுங்கில் தோல்வியா? – அஜித்திற்கு தொடரும் சோகம்

சென்னை: தமிழில் சூப்பர் ஹிட்டான அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படத்திற்கு தெலுங்கில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. வசூலும் குறைவே என்று விநியோகஸ்தர்கள் புலம்புகின்றனர்.

சென்னை: தமிழில் சூப்பர் ஹிட்டான அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படத்திற்கு  தெலுங்கில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. வசூலும் குறைவே என்று விநியோகஸ்தர்கள் புலம்புகின்றனர். 

விவேகம் படம் தோல்விக்கு பிறகு சிவா – அஜித் கூட்டணியில் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வாசம். “பேட்ட” படத்துடன் வெளியான இப்படத்திற்கு, அப்படத்தை விட பெரிதும் வரவேற்பு இருந்தது. படத்தின் வசூலும் மற்ற அஜித் படங்களை விட அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.125 கோடி முதல் ரூ.135 வரை வசூல் செய்துள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 1ம் தேதி வெளியானது. தமிழை போலவே, தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு. படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இப்படம் தோல்வியை சந்திக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். படம் வெளியான இரண்டு நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று கூறப்படுகிறது.

ajith

தெலுங்கில் சூர்யா, கார்த்தி, ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அஜித் படங்களுக்கு  இல்லாமல் போவது அஜித்திற்கு தொடர் கதையாக நடந்து வருகிறது. அஜித்திற்கு மட்டும் இந்த சோகம் தொடர்வதால் அவரது ரசிகர்கள் கவலையுடன் உள்ளனர்.  

விஸ்வாசம் படம் தமிழில் வெளியான நேரத்தில், இது தெலுங்கு படமான  ‘துளசி’ படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. வெங்கடேஷ், நயன்தாரா நடித்த இப்படம் தந்தை, மகன் பாசத்தை கதைக்கருவாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் அதை உல்டாவாக்கி தந்தை, மகள் பாசம் என கதையின் கருவை மாற்றி எடுத்தனர். இதன் காரணமாகவும் இப்படம் தெலுங்கில் வரவேற்பு பெறாததற்கு கூட ஒரு காரணமாக இருக்கலாம்  என்று கருதப்படுகிறது. இரண்டு படத்திலும் நடித்தது நயன்தாரா தான். அவருக்கு இது தெரியாமலா இருக்கும் இது ஒரே கதை தான் என்று.