தமிழிசை மகன் இனி பாஜக மீது கோபப்படவே மாட்டார்… மேலிடம் கொடுக்கப்போகும் அதிரடி ட்ரீட்மெண்ட்!

 

தமிழிசை மகன் இனி பாஜக மீது கோபப்படவே மாட்டார்… மேலிடம் கொடுக்கப்போகும் அதிரடி ட்ரீட்மெண்ட்!

பாஜக தமிழக தலைவர் தமிழிசை தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்கிற கோஷத்தை உரக்க முழங்கி வர, ஒரே ஒரு முறை கோபப்பட்ட அவரது மகன் மோகனசுந்தரம் சுக்குநூறாய் உடைத்து விட்டார்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்கிற கோஷத்தை உரக்க முழங்கி வர, ஒரே ஒரு முறை கோபப்பட்ட அவரது மகன் மோகனசுந்தரம் சுக்குநூறாய் உடைத்து விட்டார். பாஜக ஒழிக தமிழகத்தில் தாமரை மலராது எனக் கோபத்துடன் தமிழிசை முன்பே முழங்க தர்ம சங்கடத்திற்கு ஆளானார் தமிழிசை. அந்த அதிர்ச்சி நீங்குவதற்கு அவரது தலைவர் பதவி பறி போக இருக்கிறது.  

tamilisai

பாஜக தேசிய தலைவராக அமித் ஷா தொடர உள்ளார். வருகிற 6 மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார்.  அடுத்து கேரளா மற்றும் தமிழகத்திற்கு புதிய மாநில தலைவர்களை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனையில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். கேரளா மாநில பாஜக தலைவராக உள்ள ஸ்ரீதரன் மத்திய அமைச்சராக தேர்வாகி உள்ளதால் அவரது இடத்திற்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக்காலமும் முடிவடைந்து விட்டதால் இவரது பொறுப்பிற்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.

vanathi

 தமிழகத்தில் வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வருகின்ற 26-ம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

tamilisai

 தற்போது புதிய பாஜக தலைவர் அறிவிக்கப்பட இருப்பதால் மூவரில் யார் தலைவராக வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பாஜக தொண்டர்களை தாண்டி பல்வேறு தரப்பினர் இடையே எழுந்துள்ளது. ‘கட்சிப்பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் குடும்பத்துடன் நான் நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியால் எனது மகன் அப்படி நடந்து கொண்டான்’ என விளக்கமளித்து இருந்தார் தமிழிசை. தலைவர் பதவி பறிபோவதால் இனி குடும்பத்துடன் கூடிருக்க முடியும். இதனால் அவரது மகன் இனி கோபப்பட வாய்ப்பில்லை.