தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

 

தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

coronavirus

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும், ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவகுமார் தெரிவித்துள்ளார். 

ஓமனிலிருந்து வந்த தமிழர் யார்? அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. ஆனால் அவர் ஓமனிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அங்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.