தமிழராய் பிறக்க ஆசைப்பட்ட நேதாஜி! – பிறந்த நாள் ஸ்பெஷல்

 

தமிழராய் பிறக்க ஆசைப்பட்ட நேதாஜி! – பிறந்த நாள் ஸ்பெஷல்

இந்திய சுதந்திப் போரில் மறக்கப்பட்ட தலைவர் என்று கூறி கூறியே மக்கள் மனதிலிருந்து நீக்க முடியாத இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சுதந்திர போராட்டக் காலத்தில் அவரை எதிர்த்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் கூட இன்றைக்கு அவரை கொண்டாடுதே இதற்கு சாட்சி. இன்று அவருக்கு பிறந்த நாள். அவர் பற்றிய சில ஸ்வாரஸ்யமான விஷயங்களைப் பற்றிக் காண்போம்.

இந்திய சுதந்திப் போரில் மறக்கப்பட்ட தலைவர் என்று கூறி கூறியே மக்கள் மனதிலிருந்து நீக்க முடியாத இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சுதந்திர போராட்டக் காலத்தில் அவரை எதிர்த்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் கூட இன்றைக்கு அவரை கொண்டாடுவதே இதற்கு சாட்சி. இன்று அவருக்கு பிறந்த நாள். அவர் பற்றிய சில ஸ்வாரஸ்யமான விஷயங்களைப் பற்றிக் காண்போம்.

subhash-chandra-bose

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இங்கிலாந்து ராணுவத்துக்கு எதிராக மிகத் தீரத்துடன் போரிட்டது. உலகப் போர்கள் வரலாறு ஐ.என்.ஏ-வின் தாக்குதலை மிகவும் கடுமையான போர்களில் ஒன்றாக குறிப்பிடுகிறது.
இப்போதுள்ள ஐ.ஏ.எஸ் போன்றது அப்போதைய ஐ.சி.எஸ் தேர்வு. இதில் இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றவர் சுபாஷ். அரசுப் பணிக்கு தேர்வானதும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அப்போதைய ஆளுநர் மான்டேகுவிடம் அளித்தார் சுபாஷ். உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா என்று மான்டேகு பிரபு கேட்டபோது, “வருத்தப்படுவார்கள். அதைவிட என் தாய் நாட்டின் வருத்தம் மிகப்பெரியது” என்று கூறினார் சுபாஷ் சந்திரபோஸ்.
 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில்  தன்னை  இணைத்துக்கொண்டார் நேதாஜி. 1924ம் ஆண்டு பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது ஆங்கிலேய அரசு. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் சிறையிலிருந்தே வெற்றிபெற்று தான் யார் என்பதை ஆங்கிலேய அரசுக்கு உணர்த்தினார் போஸ். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

subhash-chandra-bose-03

 
நேதாஜி வெற்றி பெற்றது தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படையாக அறிவித்தார் காந்தி. தொடர்ந்து தலைவராக செயல்பட முடியாததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாக வெளியேறி பார்வர்ட் பிளாக் என்ற கட்சியைத் துவங்கினார்.
1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தையும் நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கன மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். 943 ல் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார்.  40,000க்கும் மேற்பட்ட போர் வீரர்களை கொண்ட நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ படை பிரிட்டனுக்கு எதிராக போரிட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர். தமிழர்களின் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்த அவர் அடுத்த ஜென்மத்தில் தமிழராய் பிறக்க ஆசை கொள்வதாக தெரிவித்தார். அவரது ராணுவத்தை இங்கிருந்த சில தலைவர்களே வீழ்த்த துணை போயினர், இன்று அவர்கள்தான் சேத பக்தர்கள் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பல அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த துரோகம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் என்றைக்கோ இந்தியா விடுதலை பெற்றிருக்கும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

subhash-chandra-bose

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேதாஜி அங்கிருந்து ரகசியமாக வெளியேறி, ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி வரை சென்றார். அங்குதான் இந்திய விடுதலைக்கு ஹிட்லர் உதவியைக் கேட்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஹிட்லர் தொடர்பான சில கசப்புணர்வு காரணமாக அங்கிருந்து வெளியேறினார். ஹிட்லரை அவர் முன்னிலையிலேயே எதிர்த்த ஒரே தலைவர் சுபாஷ் சந்திரபோஸ்தான் என்று வரலாறு கூறுகிறது.

subhash-chandra-bose-01

இன்று வரை சுபாஷ் சந்திர போஸ் மரணம் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. 1992ம் ஆண்டு மரணமடைந்தவர் என்ற முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அவர் எப்போது இறந்தார் என்ற சர்ச்சை நீடித்துவந்ததால் அந்த விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நேதாஜி ஆதரவாளர்களும் இந்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இன்றும் நேதாஜி மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைகள் பல சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. உலக நாடுகள் தொடர்பான விஷயம் என்பதால் உண்மை வெளியாகாமல் மறைக்கப்படுவதாக பல தகவல் பரவிக்கொண்டேதான் இருக்கின்றது. 
ஜப்பானில் உள்ள கோவில் ஒன்றில் நேதாஜியின் அஸ்தி உள்ளது என்று கூறப்படுகிறது. பல தலைவர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் தைவானில் விமான விபத்தில்தான் இறந்தாரா, அல்லது சுதந்திர இந்தியாவில் ரகசியமாக வாழ்ந்து மறைந்தாரா என்று பல ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. உண்மை வெளிவருமா, வராதா என்று யாருக்கும் தெரியாது… ஆனாலும் அவர் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் கலந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை!