தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்

 

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் வருகிற 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்

சென்னை: தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் வருகிற 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை வருகிற 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10 மணிக்கு 2019 – 2020-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அன்றைய தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் தயாரிப்பு பணியில் நிதித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.