தமிழக அரசை சாடிய விஜய்… கடம்பூர் ராஜு பதிலடி

 

தமிழக அரசை சாடிய விஜய்… கடம்பூர் ராஜு பதிலடி

சுபஸ்ரீயின் மரணத்திற்கு வருந்துகிறேன். யாரை எங்க வைக்க வேண்டுமோ அவர்களை அந்தந்த இடத்தில் வைத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது

அண்மையில் சுபஸ்ரீ மரணத்திற்கு அதிமுக தான் காரணம் என்று மறைமுகமாக சாடிய நடிகர் விஜய் வெளியிட்ட கருத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அட்லீ இயக்கத்தில் விஜய், நயந்தாரா நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்து அசத்தியுள்ளார். இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் பல கருத்துகளை தெரிவித்தார்.

அதில் குறிப்பாக சுபஸ்ரீ மரணம் குறித்து பேசிய அவர், “சுபஸ்ரீயின் மரணத்திற்கு வருந்துகிறேன். யாரை எங்க வைக்க வேண்டுமோ அவர்களை அந்தந்த இடத்தில் வைத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது. இதில் பேனரை வைத்தவர்கள் மீது அல்லது அந்த லாரி ஒட்டுநர் மீது குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறினார்.விஜய்

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்  , ” மக்கள் யாரிடமும் கேட்டு முடிவெடுக்கும் அவசியம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் சரியான முடிவையே எடுத்துள்ளனர். எந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யும் என்று அவர்களுக்கு தெரியும் நடிகர் விஜய் அவர்கள் இதற்கு கருத்து கூற அவசியமில்லை” என்று தெரிவித்தார். மேலும் அவர் நடிகர் விஜய் முதல்மைச்சரிடம் பேசாமல் இருந்திருந்தால் மெர்சல் படம் வெளியிடப்பட்டிருக்காது என்றும் அவரை சாடியுள்ளார்.சுபஸ்ரீ

அண்மையில் பேனர் விழந்த சம்பவத்தில்  சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரழந்தார். இதையடுத்து அனைத்து கட்சித் தலைர்களும்  தங்களது தொண்டர்களிடம் இனி எந்த ஒரு நிகழச்சிக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.