தமிழக அரசியலில் பரபரப்பு…… ஆளுநர் நாளை டெல்லி பயணம்

 

தமிழக அரசியலில் பரபரப்பு…… ஆளுநர் நாளை டெல்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை குற்றாலத்தில் இருக்கும் ரெசார்ட் ஒன்றில் தினகரன் தங்க வைத்துள்ளார். இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு தீ மீண்டும் எரிய தொடங்கியுள்ளது.

இதற்கிடையே தீர்ப்பு எப்படி வர போகிறது என்ற எதிர்பார்ப்பு தினகரனைவிடவும் ஆளும் தரப்புக்கு பெரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தீர்ப்பு வருவதற்குள் எப்படியாவது தினகரனிடம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில வாரங்களுக்கு முன்னதாகவே ஈபிஎஸ் டெல்லிக்கு சென்று பாஜகவை சமாதானப்படுத்திவிட்டதால் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து இருக்காது என அவர் நிம்மதியில் இருப்பதாகவும் விவரமறிந்தவர்கல் கூறுகின்றனர். 

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருக்கிறார். அப்போது தீர்ப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீர்ப்பிற்கு பிறகு ஆளுநர் நியாயமாக நடந்து கொள்வாரா? இல்லை வித்யாசாகர் ராவ் போல் செயல்படுவாரா? எனவும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.