தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு !

 

தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு !

தமிழ் வளர்ச்சிக்கும் அதன் மேன்மைக்கும் உழைக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்காக உழைக்கும் பெரியவர்கள் என சிலரை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும்  தமிழ் வளர்ச்சி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்ச்சிக்கும் அதன் மேன்மைக்கும் உழைக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்காக உழைக்கும் பெரியவர்கள் என சிலரை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும்  தமிழ் வளர்ச்சி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் சான்றோர்களின் பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

ttn

வழங்கப்பட உள்ள விருதுகள் மற்றும் விருது பெறுபவர்கள்: 

  • கபிலர் விருது- புலவர் வெற்றியழகன்
  • சொல்லின் செல்வர் விருது- கவிதாசன்
  • கம்பர் விருது-  சரசுவதி ராமநாதன்
  • ஜி.யு.போப் விருது- மரியஜோசப் சேவியர்
  • உ.வே.சா.விருது : வே.மகாதேவன்
  • முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது : முனைவர் நாகராசன்
  • இளங்கோவடிகள் விருது : கவிக்கோ ஞானச்செல்வன்
  • உமறுப்புலவர் விருது: லியாகத் அலிகான்
  • அம்மா இலக்கிய விருது : உமையாள் முத்து
  • மறைமலையடிகளார் விருது :  புலவர் முத்துக்குமாரசாமி
  • சிங்காரவேலர் விருது : அசோகா சுப்பிரமணியன்
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது : புலவர் பிரபாகரன்
  • சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் : முகமது யூசுப் மற்றும்  மஸ்தான் அலி

இந்த விருதுகளுடன் சேர்த்து ரூ.1 லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது.