தமிழக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு

 

தமிழக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு

தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர்: தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தேசிய கட்சிகளால் காலூன்ற முடியாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என தேசிய கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள், வட மாநிலத்தை சேர்ந்த 10 லட்சம் பேர் தமிழகத்தில் வேலை செய்கின்றனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சி கவிழாது, 5 ஆண்டு நீடிக்கும். 

தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகின்றது. சிபிஐ மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, அதன் இயக்குநர்களே மாற்றப்பட்டு வருவதால், சிபிஐ அமைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார். பாஜக மற்றும் திமுகவுக்கு ஆதரவாக சிபிஐ செயல்பட்டு வருகிறது என்றார்.