தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு..குடிமகன்கள் குதூகலம்!

 

தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு..குடிமகன்கள் குதூகலம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 24 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. 

கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் இரண்டே நாட்களில் மூடப்பட்டது குடிமகன்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்த நிலையில், டாஸ்மாக்குக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. 

ttn

அதே போல டோக்கன் கொடுக்கப்பட வேண்டும், 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டும், சமூக விலகலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், டோக்கன் தரும் இடமும் மது விநியோகம் செய்யும் இடமும் தனித்தனியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 24 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. 

ttn

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கிச் செல்கின்றனர். அதே போல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள  அடைக்கலாபுரம்  கிராமத்தில்  உள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் குடைகளுடன் குடிமகன்கள் காத்திருந்து டோக்கன் வாங்கிச் செல்கின்றனர்.மேலும், தேனி மாவட்டம் கூடலூரிலும் குடிமகன்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். 

ttn

மது கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் குடிமகன்கள் கொளுத்தும் வெயிலைக் கூட பாராது நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படாது என்று நினைத்துக் கொண்டிருந்த குடிமகன்களுக்கு டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.