தமிழகம் முழுவதும் கோவில்களை திறக்கலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்!

 

தமிழகம் முழுவதும் கோவில்களை திறக்கலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்!

ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களும் வைபவங்களும் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 40 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியவுடன் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை முடக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் படி மால்கள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களும் வைபவங்களும் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 40 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது.

ttn

இதனிடையே விவாசாயம் சார்ந்த தொழில்களும் சிறு,குறு தொழில் நிறுவனங்கம் மதுபான கடைகளும் இயங்கலாம் என பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்தது. அதே போல கொரோனா குறைவாக இருக்கும் பச்சை மண்டலங்களிலும்  ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

33 சதவீத பணியாளர்களுடன் கோவில்களை திறக்க வேண்டும் என்றும் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.மேலும், கோவில்களில் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்வதற்காக  ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.