தமிழகத்தை தாக்கப்போகிறது அடுத்த புயல்; கடற்கரையோர மாவட்டங்கள் உஷார்?!…

 

தமிழகத்தை தாக்கப்போகிறது அடுத்த புயல்; கடற்கரையோர மாவட்டங்கள் உஷார்?!…

கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த வாரம் முதல் கனமழை பொழிய வாய்ப்பு என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வருகிற வெள்ளிக் கிழமை வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மிதமான அளவு மழை பெய்யும்.

sbbfgb

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (சென்னை) அளித்துள்ள தகவலின்படி, இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏப்ரல் 25-ஆம் தேதி இந்திய பெருங்கடல் – தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் தமிழக கடற்கரையோர பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இடம்மாறி, ஏப்ரல் 29-ஆம் தேதி தமிழகத்தில் புயல் வீச வாய்ப்புள்ளது.

adsd

இதனால் கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஒக்கி புயல், கஜா புயலில் இருந்தே இன்னும் சரியாக மீளாத வேளையில், அடுத்த புயல் அறிவிப்பு விடப்பட்டிருப்பது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்க: ’அந்த மாதிரி ஒரு படம் எடுங்கன்னு சொன்னா அந்தப் படத்தையே எடுத்துட்டீங்களே பாஸ்’…ஒரு கடைக்குட்டி தேவராட்ட சிங்கம்…