தமிழகத்தில் 9.4 லட்சம் பேரை புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் பட்டியலில் சேர்க்க ரகசிய திட்டம்…….

 

தமிழகத்தில் 9.4 லட்சம் பேரை புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் பட்டியலில் சேர்க்க ரகசிய  திட்டம்…….

இந்தி நிதியாண்டில் புதிதாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை 1.3 கோடி அதிகரிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

நம் நாட்டில் மக்கள் தொகை சுமார் 130 கோடி என்ற அளவில் உள்ளது. அதேசமயம் இதில் எத்தனை பேர் அரசுக்கு வரி கட்டுகிறார்கள் என்று பார்த்தால் வெறும் சொற்பமான அளவில் உள்ளது. அதாவது சில கோடி பேர் மட்டுமே வருமான வரி கட்டுகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நிதி வேண்டும். அதற்கு மக்களின் வரி பணம்தான் முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஐ.டி. தாக்கல்

ஆனால் சில கோடி பேர் மட்டும் கட்டும் வருமான வரியால் பெரிய செலவினங்களை மத்திய அரசால் மேற்கொள்ள முடியாது. ஆகையால், வருமான வரி விதிப்புக்குள் மேலும் பல கோடி பேரை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித்துறையின் உச்ச அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த நிதியாண்டில் புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை 1.30 கோடி அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 

இதற்காக ரகசிய செயல் திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளது. மேலும், கடந்த 2018-19ம் நிதியாண்டில் புதிதாக வருமான வரி கணக்கை 1.10 கோடி பேர் தாக்கல் செய்து இருந்தனர். ஆகையால் இந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்ட கூடியதே என்று நேரடி வரிகள் வாரியம் கூறுகிறது. 

வருமான வரி கணக்கு

தமிழ்நாட்டில் மட்டும் இந்த ஆண்டில் புதிதாக வருமான வரி கணக்கு செய்வோரின் எண்ணிக்கையை 9.4 லட்சம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் முறையே 7.3 லட்சம் மற்றும் 7.5 லட்சம் பேரை புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் பட்டியலில் இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல மண்டலங்களில் புதிதாக வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.