தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி! 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி! 

இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 

TN medical college

அதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் நாமக்கல் ஆகிய 6  மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில் தற்போது 6 கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.