தமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்; மத்திய அரசு ஒப்புதல்!

 

தமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்; மத்திய அரசு ஒப்புதல்!

நாடு முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

புதுதில்லி: நாடு முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில், தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைய உள்ளது.