தமிழகத்தில் விற்கப்படும் மீன்களைச் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் வாழலாம் : அமைச்சர் ஜெயக்குமார்

 

தமிழகத்தில் விற்கப்படும் மீன்களைச் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் வாழலாம் : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் விற்கப்படும் தரமான மீன்களைச் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று தெரிவித்தார். 

தமிழகத்தின் துறைகளுக்கான மானிய கோரிக்கைகளின் இரண்டாவது நாள் சட்டப்பேரவை  கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன் கேள்வி நேரத்தின் போது, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுகிறது என்று வெளியாகும் தகவல்கள் வதந்தி. அதனை யாரும் நம்ப வேண்டாம். அத்தகைய மீன்கள் விற்கப் படுகிறதா என்று சுகாதாரத்துறை, உணவுத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார். 

ttn

தொடர்ந்து, தமிழகத்தின் எல்லா இடங்களிலும் தரமான மீன்கள் மட்டுமே விற்கப் படுகின்றன. வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிந்தவுடன், அந்த அனைத்து மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் விற்கப்படும் தரமான மீன்களைச் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்னர் 5 டன் ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.