தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக்கல்லூரிகள்…சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் தகவல் !

 

தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக்கல்லூரிகள்…சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் தகவல் !

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி தருமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி தருமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அதன் படி, அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரிகள் அமைப்பது குறித்து  மத்திய  தொழில்நுட்பக் குழுக் கூட்டம் ஆலோசனை நடத்திய பின், ஒப்புதல் அளித்தது. அதில், கல்லூரிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட பிறகு ஒப்புதல் அளிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttnn

இந்நிலையில் இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் மேலும் 4  மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றும் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைக்க அனுமதி கேட்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.