தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது !

 

தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது !

பரிசோதனை கருவிகளை வாங்க அனுமதி மருத்ததுடன் 10லட்சம்  பரிசோதனை கருவிகளை வாங்கி அதை வழங்குவதாக முடிவு செய்தது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க  மத்திய, மாநில அரசுகள்  தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதனையை மேற்கொள்ளவே நாள் கணக்கில் நேரம் எடுப்பதால் உடனடியாக அதை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது. 

ttt

ஆனால் பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது. அங்கேயும் நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடிகிறது. இந்த நிலை நீடித்தால் சமூக பரவல் வேகமாக பரவக்கூடும். 

tt

இதன் காரணமாக  30 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதனால் முதற்கட்டமாக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்தது தமிழக அரசு. ஆனால் மத்திய அரசோ நேரடியாக மாநிலங்கள் பிட் டெஸ்ட் கிட்  பரிசோதனை கருவிகளை வாங்க அனுமதி மருத்ததுடன் 10லட்சம்  பரிசோதனை கருவிகளை வாங்கி அதை வழங்குவதாக முடிவு செய்தது. 

tt

அதன்படி தமிழகத்திற்கு முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியுள்ளது.  இதை தொடர்ந்து  ஒவ்வொரு மாவட்டமாக  “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை  செய்யும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.