தமிழகத்தில் முதன்முறையாக ‘தேர்தல் செயலி’.. கலக்கும் தஞ்சை !

 

தமிழகத்தில் முதன்முறையாக ‘தேர்தல் செயலி’.. கலக்கும் தஞ்சை !

தமிழகத்தில் முதன் முறையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக ‘தேர்தல் செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக ‘தேர்தல் செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வாக்காளர், வேட்பாளர், தேர்தல் பணியாளர் என தனித்தனியாக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ttn

இந்த ஆப்-இல் வாக்காளர்கள் அவர்களது பெயர்களை சரிபார்த்து, வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்யும் வசதியும், வாக்காளர்களுக்கான வாக்கு சாவடிகளை அறியும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஓட்டு போடுவதற்கான விதிமுறைகளையும், புகார்கள் தெரிவிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளன. 

ttn

வேட்பாளர் என்ற பகுதியின் உள்ளே வேட்பாளர்களுக்கான படிவங்கள் மற்றும் கையேடு உள்ளிட்டவை இணைக்கப்பட்டு தேர்தல் விவரங்களும் தேர்தல் நடத்தை விதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர் பகுதியில், தேர்தல் பட்டியல்கள், வாக்கு சாவடி எண்கள், கையேடு, காணொலிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வாக்குப்பெட்டியை கையாளும் விதிமுறைகளும் பிடிஎஃப் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயலி தற்போது கூகுள் ட்ரைவ் மூலம் வாட்ஸ் ஆப்பில் பகிரபட்டு வருகிறது. விரைவில் இதற்கான  ப்ளே ஸ்டோர் இணைப்பு கிடைக்கவுள்ளது.