தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்! தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை!

 

தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்! தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை!

தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று கோவை வந்தார். அவர், கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று கோவை வந்தார். அவர், கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்திலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பின் தாக்கம் இருக்கும் என்கிற பதட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் நேற்று தமிழகத்தின் போலீஸ் டிஜிபி திரிபாதி கோவை சென்றார். 

tripathi

நேற்று கோவையில் நடைப்பெற்ற கூட்டத்தில், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுடன், மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையையும்  தீவிரப்படுத்துவது குறித்து டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனைகளை வழங்கினார்.  கேரள மாநிலத்தின் வனப்பகுதிகளில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில், குண்டு காயங்களுடன் மாவோயிஸ்டு தலைவர் தீபக் தப்பினார். இதன் காரணமாக தப்பிச் சென்ற மாவோயிஸ்டு தலைவர் தீபக், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கேரள போலீசார் சந்தேகமடைந்தனர். இது குறித்து தகவலும் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்தும், மாவோயிஸ்டு தேடுதல் வேட்டைக் குறித்தும் டி.ஜி.பி. ஆலோசனை நடத்தினார். தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் படியும், வனப்பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.